Wednesday, March 12, 2014
> ஒருமுறை (14.6.1932), ஆந்திர
> மாநிலத்தின்
> நகரியில்
> முகாமிட்டிருந்தார்,
> காஞ்சி மகான்.
> அப்போது,
> கும்பகோணத்தில்
> உள்ள அவருடைய தாயார்
> மகாலக்ஷ்மி
> அம்மாள் சிவபதம்
> அடைந்துவிட்டார்
> எனும் தகவல்
> சுவாமிகளுக்குத்
> தெரிவிக்கப்பட்டது.
>
> ஆச்சார்யக்
> கடமையை
> நிறைவேற்றும்
> வகையில், நீராடிய
> சுவாமிகள்,
> அந்தணர்களுக்குத்
> தானம் அளித்து, தன்
> கடமையைச் செவ்வனே
> நிறைவேற்றினார்.
>
> பெரியவாளின்
> மனதுள் மெல்லியதான
> அந்த எண்ணம்
> ஒருநாள் உதித்தது.
> ‘ஈச்சங்குடியில்
> உள்ள, அவருடைய தாயார்
> பிறந்த இல்லத்தை
> வேத பாடசாலையாக்க
> வேண்டும்; அந்த
> இடத்தில், எப்போதும்
> வேத கோஷம்
> முழங்கிக்கொண்டே
> இருக்கவேண்டும்’ என
> விரும்பினார்
> பெரியவாள்.
>
> காலங்கள் ஓடின.
> 93-ஆம் வருடம்.
> காஞ்சி
> மகாபெரியவாளின்
> பக்தரான ஹரி,
> பெங்களூருவில்
> இருந்து, அவரைத்
> தரிசிப்பதற்காக
> வந்திருந்தார்.
>
> அவரிடம் பெரியவா,
> ”ஈச்சங்குடி
> கச்சபுரீஸ்வரர்
> கோயிலுக்குப்
> புனருத்தாரணம்
> பண்ணணும்னு
> விரும்பறே!
> நல்லது, பண்ணு!”
> எனச் சொன்னதும்,
> நெகிழ்ந்துவிட்டார்
> அவர்.
>
> அந்தக் கோயில்
> குறித்தும்,
> ஸ்ரீகச்சபுரீஸ்வரர்
> குறித்தும்,
> ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய
> கருணை குறித்தும்
> விரிவாக எடுத்துரைத்த
> பெரியவா,
> சிறு வயதில்
> அந்தக் கோயிலுக்குச் சென்றதையும்,
> அங்கே அமர்ந்து
> வேதங்கள்
> கற்றதையும்
> விவரித்தார்.
>
> என்ன நினைத்தாரோ…
> சட்டென்று
> அன்பரிடம்”ஒரு
> உபகாரம் பண்ண
> முடியுமோ?” என்றவர்,
> ஈச்சங்குடியில்
> உள்ள தாயாரின்
> இல்லம் குறித்தும்,
> அந்த இடத்தை வேத
> பாடசாலையாக அமைக்க
> வேண்டும் என்கிற தன்
> விருப்பம்
> குறித்தும் சொல்லி,
> ”இது
> எல்லாருக்கும்
> உபயோகமா இருக்கும்”
> என்றார் காஞ்சி மகான்.
>
> உடனே ஹரி, ”இது என்
> பாக்கியம்! என்
> பாக்கியம்!’ என்று
> சொல்லி, ஆனந்தத்தில்
> அழுதேவிட்டார்.
>
> ‘எத்தனையோ
> கோயில்களைப்
> புனரமைத்தவர்
> மகாபெரியவா!
> பூமிக்குள் மறைந்து
> கிடந்த
> கோயில்களைக் கூட
> அடையாளம் காட்டி,
> அந்தக் கோயிலை
> வழிபாட்டு
> ஸ்தலமாக மாற்றி
> அருளிய மகான்.
> தான் சம்பந்தப்பட்ட
> எண்ணம், தன்னுடைய
> தாயார் வாழ்ந்த வீடு
> என்பதால்
> இத்தனை வருடங்களாக
> எவரிடமும்
> சொல்லாமல் இருந்திருக்கிறாரே!’
> என,
> ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி
> சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திரரும்
> வியந்துபோய்ப்
> பெரியவாளைப் பார்த்தனர்.
>
> பிறகென்ன… அந்த
> வீடு,
> விலைக்கு வாங்கப்பட்டது.
> அன்பர்களின்
> கூட்டு முயற்சியில்,
> வேத பாடசாலைப்
> பணிகள் துவங்கின.
> புதிதாகத்
> துவங்கும்
> வேத பாடசாலையில்,
> குரு
> பூஜை நடத்துவதற்காக பெரியவாளின்
> ஆசியைப் பெற வந்தார்
> அன்பர் ஹரி.
>
> அன்றைய தினம், 8.1.94.
>
> அதாவது, தனது கருணைப்
> பார்வையாலும்
> தீர்க்க
> தரிசனத்தாலும்
> உலக மக்களை உய்வித்த
> அந்த நடமாடும்
> தெய்வம், அன்றைய
> தினம் ஸித்தி
> அடையப் போகிறார்
> என்று யாருக்குத்தான்
> தெரியும்?!
>
> பெரியவா அன்றைய
> தினம் யாருக்குமே
> தரிசனம் தரவில்லை.
> ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம்.
> பிரபலங்களின் வருகையும்
> பெரியவாளுக்குத்
> தெரிவிக்கப்பட்டது.
>
> அதே போல்,
> ‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி
> வந்திருக்கார்’
> என்றும்
> சொல்லப்பட்டது.
> சட்டென்று கண்
> திறந்த பெரியவா,
> மெள்ள நிமிர்ந்தார்.
> அருகில்
> வரச்சொன்னார். பாதுகைகளை
> அணிந்துகொண்டார்.
> அன்பரை
> ஆசீர்வதித்தார்.
>
> வேத
> பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையைப்
> பெரியவாளிடம்
> காட்டினர்.
> அதை வாங்கிப்
> படித்தவர்,
> அதிலிருந்த தன்னுடைய
> பெற்றோரின்
> புகைப்படத்தை
> கண்களில்
> ஒற்றிக்கொண்டார்.
> பிறகு தன்னுடைய
> பாதுகைகளை
> அன்பரிடம் தந்தார்.
> ”இந்தப் பாதுகைகளை
> எடுத்துண்டு
> போ! ஈச்சங்குடி வேத
> பாடசாலையில வை. நன்னா
> நடக்கும்!’
> என சொல்லாமல்
> சொல்லி,
> ஆசி வழங்கினார்.
>
>
>
>
>
> ஈச்சங்குடி வேத
> பாடசாலை,
> அவரின் பேரருளால்
> இன்றைக்கும்
> இயங்கி வருகிறது.
> ஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால்,
> வேத பாடசாலையில்
> தற்போது
> புனரமைப்புப்
> பணிகள் நடைபெற்று
> வருகின்றன.
> கீழ்த்தளத்தில்
> வேத பாடசாலை, மேல்
> தளத்தில்
> பள்ளிக்கூடம்
> எனக் கட்டுகிற
> முயற்சிகள்
> மேற்கொள்ளப்பட்டு
> வருகின்றன.
>
> பெரியவாளின்
> தாயாரால் வணங்கப்
> பட்டு,
> பெரியவாளின்
> முயற்சியால்
> புனருத்தாரணம்
> செய்யப்பட்ட
> ஸ்ரீகச்சபுரீஸ்வரர்
> கோயில், அழகுறத்
> திகழ்கிறது.
> இவரை வணங்கினால்,
> நிலம் மற்றும்
> வாஸ்து பிரச்னைகள்
> யாவும் நீங்கி, வீடு-
> மனையுடன்
> குறையின்றி வாழ்வர்
> என்பது ஐதீகம்!
>
> அருகில் உள்ள வேத
> பாடசாலைக்குச்
> சென்று,
> அங்கேயுள்ள
> பெரியவாளின்
> பாதுகைகளை நமஸ்கரித்தால்,
> ஞானகுருவின்
> பேரருளும்
> கிடைக்கும் என்பது
> உறுதி!
>
>
>
>
>
>
> பிரபல
> ஹரிகதா விற்பன்னர்
> ப்ரஹ்ம ஸ்ரீ டி எஸ்
> பாலக்ருஷ்ண
> சாஸ்திரிகள் சொன்னது
>
>
>
>
>
> காஞ்சிபுரத்திலே
> இருக்காளே, காமகோடி
> பெரியவா...சர்வஞா அவா.
>
> ஒரு தடவை
> கும்பகோணத்திலே,
> தர்சனத்துக்கு நாங்க
> எல்லாம் போயிருந்தோம்.
> என் மாமனார்
> அழைச்சிண்டு
> போயிருந்தார்.
>
> எனக்கா, மனசிலே ஒரு
> பயம். ஸ்வாமிகள்
> ரெண்டு, மூணு ன்னு
> பண்ணிடுவார், பூஜை
> முடிக்க. அப்புறம் நம்ப
> சாப்பிடறதுக்கு
> இன்னும் நேரம் ஆயிடும்
> ன்னு...
> அதனால நான் பூஜைக்கு
> வரலை ன்னுட்டு
> மடத்துக்கு போகலே.
>
> என் மாமனார் இதை
> திருத்த முடியாது
> ன்னுட்டு கிளம்பி
> போய்ட்டார். அங்கே
> பெரியவா, 'மாப்பிள்ளை
> (என்னைத்தான்!!) எங்கே?'
> ன்னுருக்கார்.
> 'அவருக்கு உடம்பு சரி
> இல்லே, ரூம்ல
> இருக்கார்' ன்னு
> சொல்லி இருக்கார் என்
> மாமனார்.
>
> 'அவரை இங்கே
> அழைச்சுண்டு வா'
> என்று சொன்னார்
> பெரியவாள். வந்து
> கூப்ட்டா.
>
> எனக்கு கையும் ஓடலே,
> காலும் ஓடலே...
>
> வெடவெடன்னுண்டு
> பெரியவா முன்னாடி போய்
> நின்னேன்.
>
> 'ஓடம்பு
> சரியில்லையோ?'
> அப்டின்னார் பெரியவா.
>
> நான் மாமனாரை
> பார்த்தேன்.
>
> 'ஆமா, அவருக்கு உடம்பு
> சரி இல்லே....' ன்னு
> சொல்லிட்டு இது ஏன்
> இப்படி படுத்தறது
> என்கிற மாதிரி
> பார்த்தார் மாமனார்
> என்னை.
>
> 'ஆமாம் பெரியவா,
> எனக்கு உடம்பு சரி
> இல்லே'.
>
> 'குளத்துலே
> குளிச்சியோ?'
>
> திரும்பவும் ஒரு முழி
> முழிச்சிட்டு, 'ஆமாம்
> பெரியவா, குளத்திலே
> குளிச்சேன்'.
>
> 'தண்ணி நிறையா
> இருக்கோ, ரொம்ப
> ஜில்லுன்னு இருக்கோ'.
>
> 'ஆமாம் பெரியவா'
> என்று சொன்னேன். என்
> மாமனார் தலையில் தான்
> அடித்துக் கொள்ள
> வில்லை என்னை
> பார்த்தார் பரிதாபமாக.
>
>
> 'ஜுரமோ, உடம்பு ரொம்ப
> சுடறதோ?' பெரியவா....
>
> 'ஆமாம் பெரியவா...'
> நான்.
>
> 'சரி, உடம்பு சரி
> இல்லேன்னா...ஒண்ணும்
> சாப்ட படாது. வயத்தை
> லங்கணம் போடறது தான்
> அதுக்கு நல்ல மருந்து.
> நானும் இன்னிக்கு பூஜை
>
> ரொம்ப விஸ்தாரமாவே
> பண்ணப்போறேன்...
> அப்படியே ஒரு ஓரமா
> செவுத்துலே சாஞ்சு
> ஒக்காந்துக்கோ...மூணு
> நாலு மணி ஆயிடும்.
>
> பூஜை முடிஞ்சா விட்டு,
> தீர்த்த பிரசாதம்
> தரேன். அதை வாங்கிண்டு
> அப்புறமா கொஞ்சமா
> ரசஞ்சாதமா சாப்பிடு.
> எல்லாம் சரியா
> போயிடும்'.
>
> அத்தனையும் அவா
> கண்டுபிடிச்சிடுவா...
>
>
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment